2009-07-16 19:35:48

மனிதன் முதன்முதலாக நிலவில் கால்பதித்த நாள் செய்தி.160709.


இந்நாள் ஜூலை 16 1969 ல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் சந்திரனுக்குக் கிளம்பினார்கள் . ஜூலை 21 ல் மனிதன் முதன்முதலில் சந்திரனில் காலெடுத்து வைத்தது மனுக்குலத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும் . அந்த வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் , எட்வின் ஆல்ட்ரின் , மைக்கிள் காலின்ஸ் ஆவர் . அவர்கள் நிலவில் கால்பதித்ததை முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் காஸ்டல் கண்டோல்போவில் உள்ள வத்திக்கானின் வானிலை ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து தொலை நோக்கி வழிபார்த்து மனமுருகி செபித்தார் . உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவர்க்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக எனக் கூறிச் செபித்து , விண்வெளிவீரர்களையும் அச்சாதனைக்கு உதவிய அனைவரையும் திருத்தந்தை 6 ஆம் பவுல் பாராட்டினார் . பின்னர் திருத்தந்தை அமெரிக்காவின் அன்றைய தலைவர் ரிச்சர்ட் நிக்சனுக்கு தந்தி வழி வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். இதே நாளில் இன்று ஜூலை 16 தேதியில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் புளாரிடாவின் கென்னடி மையத்திலிருந்து மீண்டும் வெற்றிகரமாக எண்டேவர் என்னும் விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும் .எண்டேவர் 11 நாட்களுக்கு விண்வெளி சோதனைக்கூடத்தில் ஜப்பான் நாட்டு செயற்கைக்கோளில் பழுது நீக்கிவிட்டு பூமிக்குத் திரும்பும் எனத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.