2009-07-15 15:14:58

லூசோன் தீவு நீர்த்தேக்கத்திற்கு ஆயர்களும் குருக்களும் கடும் எதிர்ப்பு


ஜூலை15,2009 பிலிப்பைன்சின் லூசோன் தீவில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள லைபான் நீர்த்தேக்கத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் இரண்டு ஆயர்களும் 28 குருக்களும் தேசிய ஊடகத்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பெரும்பாலும் பூரிவீக மக்களைக் கொண்ட 3500 குடும்பங்கள் இடம் பெயரவும் எட்டு கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தையும் இந்த அணைக்கட்டு கொண்டு வரும் என்று அக்கடிதம் எச்சரிக்கின்றது.

2010ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வேளை, அரசு இதற்கு அனுமதியளித்துள்ளது பற்றிய கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இப்புதிய அணைக்கட்டு கட்டப்படுவதற்கான திட்டம், மூதாதையர் சொத்து மற்றும் பூர்வீக இனத்தவரின் உரிமைகள் குறித்த சட்டத்தை அங்கீகரிப்பதாய் இல்லையெனவும் அக்கடிதம் கூறுகிறது.

சர்ச்சைக்குரிய லைபான் நீர்த்தேக்கம் 5200 கோடி பேசோஸ் பணச் செலவில் கட்டப்படத் திட்டமிடப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.