2009-07-15 15:16:26

இராக்கில் இடம் பெறும் வன்முறைகள் அதிகமாக அரசியல் நோக்கம் கொண்டவை, பாக்தாத் பேராயர்


ஜூலை15,2009 இராக்கில் இடம் பெறும் வன்முறைகள் சமய நோக்கு கொண்டவை என்பதைவிட அதிகமாக அரசியல் நோக்கம் உடையவை என்று பாக்தாத் பேராயர் ஜான் பெஞ்சமின் ஸ்லைமான் கூறினார்.

இச்செவ்வாயன்று ஸ்பெயினின் மத்ரித்தில் காரித்தாஸ் தலைமையகத்தில் இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில் பேசிய பேராயர் ஸ்லைமான், கடந்த மூன்று நாட்களில் பாக்தாத்தில் ஏழு கிறிஸ்தவ ஆலயங்கள் குண்டு வெடிப்பால் தாக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வன்முறைகள் குறைந்துள்ளன என்றார்.

வன்முறையால் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை 80 விழுக்காடு குறைந்திருந்தாலும், கத்தோலிக்க ஆலயங்கள் மீதான அண்மைத் தாக்குதல்கள் வன்முறைகள் குறைகின்றன என்ற மக்களின் நம்பிக்கையை குறைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

பாக்தாத்தில் இடம் பெற்றுள்ள அண்மைத் தாக்குதல்கள் இன்னும் பல கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறக் காரணமாக அமையும் என்றும் பேராயர் ஸ்லைமான் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.