2009-07-11 15:38:24

அரசுத் தலைவர் ஒபாமாவுக்கு மனிதனின் மாண்பு என்ற திருப்பீட ஏடு


ஜூலை11,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமா, நேற்று மாலை திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்த போது திருத்தந்தை அவருக்கு உயிரியல் நன்னெறிகள் அடங்கிய ஏட்டைக் கொடுத்தது பற்றி நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீடப் பேச்சாளர், நன்னெறிகள் பற்றிய திருச்சபையின் போதனைகளை திருத்தந்தை அவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார் என்றார்.

இந்த மிக முக்கியமான விவகாரம் பற்றி திருத்தந்தை அவரிடம் தெளிவுபடுத்த முயற்சித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.

அதிபர் ஒபாமா திருத்தந்தை சொன்ன கருத்துக்களைக் கவனத்துடன் உற்றுக் கேட்டதாகவும், கருக்கலைப்புக்களின் எண்ணிக்கைகளைக் குறைப்பதற்கான தனது அர்ப்பணத்தை தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் பல்வேறு நன்னெறி விவகாரங்களில் திருச்சபையின் அக்கறைக்கு அவர் செவிமடுத்தாகவும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.

மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அதிபர் ஒபாமாவுக்கு வழங்கிய திக்னித்தாஸ் பெர்சோனே அதாவது மனிதனின் மாண்பு என்ற ஏட்டை ஒபாமா வாசிக்கவிருப்பதாகவும், யுக்திகளுடன் கூடிய தொடர்புகளுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய துணை பாதுகாப்பு அதிகாரி டெனிஸ் மெக்டொனாப் நிருபர்களிடம் கூறினார்.

இம்மாதம் ஏழாம் தேதி வெளியிடப்பட்ட காரித்தாஸ் இன் வெரித்தாத்தே என்ற தமது அப்போஸ்தலிக்கத் திருமடலை அதிபர் ஒபாமாவுக்கு முதலில் வழங்கினார் திருத்தந்தை. பின்னர் திக்னித்தாஸ் பெர்சோனே என்ற ஏடும் அவரிடம் கொடுக்கப்பட்டது. இதனைக் கடந்த டிசம்பரில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் வெளியிட்டது.

திருத்தந்தையும் அரசுத் தலைவர் ஒபாமாவும் மூடிய கதவுகளுக்குள் தனியாக 35 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர்








All the contents on this site are copyrighted ©.