2009-07-09 15:53:20

வரலாற்றில் ஜூலை 10


மறைசாட்சிகள் பெலிசித்தாஸ், ரூஃபினா, செக்குந்தா ஆகியோர் இந்நாளில் நினைவுகூரப்படுகின்றனர். வாழ்க்கை வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. எனவே எவ்வாறு வாழ்வது என்பதைவிட எவ்வாறு இறப்பது என்பது பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டும் என்பதை இப்புனிதர்கள் நினைவுபடுத்துகின்றனர்.

988 - லிப்பே நதிக்கரையில் டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.

1212 - லண்டன் நகரின் பெரும் பகுதி தீயால் அழிந்தது.

1800 – இந்திய துணைக்கண்டத்தில் உருது, இந்தி மற்றும் பிற உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்துவதற்கென ஆங்கிலேய அரசு கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரியை ஆரம்பித்தது.

1806 - வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.

1925 - இந்திய ஆன்மீகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான 44ஆண்டுகள் மௌன நோன்பைத் தொடங்கினார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.