2009-07-09 15:43:42

இந்தோனேசியாவில் மனித வியாபாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அந்நாட்டின் எட்டு மறைமாவட்டங்களும் இணைந்து நடவடிக்கை


ஜூலை09,2009 இந்தோனேசியாவில் மனித வியாபாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அந்நாட்டின் எட்டு மறைமாவட்டங்களும் இணைந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்தோனேசியாவில் மனித வியாபாரத்திற்கு ஏழ்மையும் ஊழலுமே முக்கிய காரணங்கள் என்றுரைத்தத் திருச்சபை அதிகாரிகள், வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களுக்கு, அந்நாடுகளின் அரசுகளின் நிலைமை மற்றும் பிற விபரங்கள் போதுமான அளவு வழங்கப்படுவதில்லை என்று கவலை தெரிவித்தனர்.

ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப்பின் கணிப்புப்படி சுமார் ஒரு இலட்சம் இந்தோனேசியப் பெண்களும் சிறாரும் பாலியல் தொழில் மற்றும் பிற தொழில்களுக்காக மலேசியா, புருனெய், சிஙகப்பூர், ஜப்பான், ஹாங்காங் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வியாபாரம் செய்யப்படுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.