2009-07-08 14:24:03

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்-“காரித்தாஸ் இன் வெரித்தாத்தே”


ஜூலை08,2009 உரோமையில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகம் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு திருத்தந்தை, தமது புதிய “காரித்தாஸ் இன் வெரித்தாத்தே” திருமடல் பற்றி உரையாற்றினார். RealAudioMP3

இன்று நான் எனது திருமடலான “காரித்தாஸ் இன் வெரித்தாத்தே” குறித்த சிந்தனைகளை வழங்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் உண்மையை அன்பில் வாழ்வது திருச்சபையின் சமூகப்படிப்பினையின் இதயமாக உள்ளது. இந்த வாழ்வானது சமூகம் மற்றும் தனிமனிதர்களின் உண்மையான புதுப்பித்தலுக்குத் தேவைப்படுகின்றது என்பதை நினைவுபடுத்தும் மற்றும் மனிதகுல நல்வாழ்விற்கு அத்தியாவசியமானதாக இருக்கும் சமூகத் தலைப்புகள் குறித்து விவாதிக்கும் பாப்பிறை ஆறாம் பவுலின் சுற்றுமடல் போப்புலோரும் புரோகிரெஸ்ஸியோ வெளியிடப்பட்டு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துள்ளன. இச்சுற்றுமடல், இன்றைய சமூகப் பிரச்சனைகளுக்குத் தொழில் ரீதியான தீர்வுகளைத் தர நோக்கம் கொள்ளவில்லை. மாறாக, மனிதகுல வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் முக்கிய கொள்கைக் கூறுகள் நோக்கித் தனது கவனத்தைத் திருப்புகின்றது. இவற்றஉள் முக்கியமானது, அனைத்து உண்மை வளர்ச்சிகளின் மையமாக இருக்கும் மனித வாழ்வாகும். மேலும் இது, மனித வளர்ச்சிக்கான ஒரு பகுதியாக மத சுதந்திரத்துக்கான உரிமை குறித்தும் பேசுகின்றது. தொழிற்நுட்பத்தில் மட்டுமே எல்லையற்ற நம்பிக்கை கொண்டு வாழ்வது குறித்து எச்சரிக்கும் இச்சுற்றுமடல், தொழிற்துறையிலும் அரசியலிலும் பொதுநலன் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தும் நீதியான மனிதர்கள் இருக்க வேண்டியதன் தேவையையும் கோடிட்டுக் காட்டுகிறது. இன்றைய உலகைப் பாதிக்கும் சில முக்கிய பிரச்சனைகள் பற்றிப் பேசும் இச்சுற்றுமடல், உணவுப் பாதுகாப்பு, விவசாய மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மதிப்பு போன்றவைகள் ஊக்குவிக்கப்படுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான அழைப்பையும் விடுக்கிறது. இன்றைய தொழில்வகை, வியாபார உலகை இலாபம் மட்டுமே வழிநடத்திச் செல்லாவண்ணம் ஒழுக்கரீதியால் வடிவமைக்கப்பட்ட பொருளாதார வல்லுனர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் தேவை குறித்தும் இச்சுற்றுமடல் வலியுறுத்துகிறது. RealAudioMP3

அன்பு நண்பர்களே, மனிதகுலம் எனும் ஒரே குடும்பத்தின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் ஒன்றிணைந்ததாய், முழுமையுடையதாய் இருக்க வேண்டுமெனில் மனிதனின் ஆன்மீக வளர்ச்சி மற்றும் உண்மையிலான பிறரன்பெனும் தூண்டு சக்தி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியலிலும் பொருளாதார நிர்வாகத்திலும் பணிபுரியும் அனைவருக்காகவும் குறிப்பாக இத்தாலியில் ஜி8 மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் தலைவர்களுக்காகவும் செபிப்போம். அவர்களின் தீர்மானங்கள் இவ்வுலகின் உண்மையான வளர்ச்சியை ஊக்குவிக்கட்டும். நன்றி. இவ்வாறு ஆங்கில மொழியில் இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தா RealAudioMP3 ர்







All the contents on this site are copyrighted ©.