2009-07-08 14:17:05

சண்டையில் கணவன்களை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான கைம்பெண்களுக்கு கொழும்பு உயர்மறைமாவட்டம் உதவி


ஜூலை08,2009. இலங்கையில் நடந்து முடிந்துள்ள சண்டையில் கணவன்களை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது கொழும்பு உயர்மறைமாவட்டம்.

இலங்கை அரசுக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குமிடையே ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சுமார் நாற்பதாயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ள வேளை, ஏழ்மை மற்றும் தனிமையால் துன்புறும் இப்பெண்களுக்கு உதவுவதற்கு கொழும்பு உயர்மறைமாவட்ட குடும்ப மேய்ப்புப்பணி ஆணைய இயக்குனர் அருள்திரு ஜூலியன் பாட்ரிக் பெரேரா புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

கைம்பெண்களுக்கான தினம் என்ற ஒரு நாளை அறிவித்துள்ள அக்குரு, எல்லா வயது கைம்பெண்களையும் மேய்ப்புப்பணி மையத்திற்கு வரவழைத்து அவர்கள் தனியாக இல்லை, திருச்சபை அவர்களுடன் இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

 








All the contents on this site are copyrighted ©.