2009-07-04 15:56:02

இத்தாலியில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்களுக்கு தண்டனையளிக்கும் புதிய திட்டம்


ஜூலை04,2009 இத்தாலியில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்களுக்கு தண்டனையளிக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது அந்நாட்டுப் பாராளுமன்றம்.

இத்தாலியிலுள்ள புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றதாரர்களுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் யூரோக்கள் வரையிலான அபராதமும் விதிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, இவ்வியாழனன்று பாராளுமன்ற மேல்சபையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து இது சட்டமாக அமுலாக்கப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

சட்டவிரோத குடியேற்றதாரர்களை தங்க வைத்திருப்பவர்களுக்கும் மூன்று வருடத்துக்கு மேலான சிறைத் தண்டனை வழங்குவதற்கும் இது வழிவகை செய்கிறது.

எனினும் இந்த புதிய சட்ட அமுலாக்கத்திற்கு மனித உரிமைக் குழுக்களும் வத்திக்கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மட்டும் 36,000 க்கும் அதிகமானோர் சட்டவிரோத மாக இத்தாலியில் நுழைந்துள்ளதாகவும், இது அதற்கு முந்திய வருடத்தைவிட 75 விழுக்காடு அதிகமெனவும் கூறப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.