2009-07-03 15:51:24

மதமாற்றத்தைக் கெடுபிடியாக்கும் சமய சுதந்திர சட்டங்களை மறுபரிசீலனை செய்ய இந்திய அரசு முயற்சி


ஜூலை03,2009 இந்தியாவின் பல மாநிலங்களில் மதமாற்றத்தைக் கெடுபிடியாக்கும் சமய சுதந்திர சட்டங்களை மறுபரிசீலனை செய்வதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்திருப்பது குறித்து தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர் இந்திய திருச்சபை தலைவர்கள்.

ஊடகங்களில் வெளிவந்துள்ள இந்திய அரசின் இந்நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது என்றுரைத்த இந்திய ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் ஆணையச் செயலர் அருட்திரு எம்.டி.தாமஸ், அரசின் இது குறித்த இன்னும்பல தகவல்களை எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத்தைக் கடினமாக்கும் சமய சுதந்திர சட்டங்கள், மறைப்பணியாளர்கள் மீது குறி வைக்கப்படுகின்றன, ஏனெனில் இவர்களின் சமூகநலத் திட்டங்கள் மதமாற்றத்தைத் தூண்டுகின்றன என்று எளிதில் குறைசொல்வதற்கு ஏதுவாக இருக்கக் கூடும் என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறுகின்றனர்.

1950ம் ஆண்டில் இந்திய அரசியல் அமைப்புமுறை அறிவிக்கப்பட்ட பின்னர், 1967ல் ஒரிசா மாநிலத்தில் முதன்முறையாக மதமாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் 1968ல் மத்திய பிரதேசத்திலும், 1978ல் அருணாச்சல பிரதேசத்திலும் இவை கொண்டு வரப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.