2009-07-03 15:47:49

புனிதர் மற்றும் முத்தி பெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென முத்தி பெற்றவர்கள், இறையடியார்கள், மறைசாட்சிகள் என 12 பேரின் பெயர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன


ஜூலை03,2009 புனிதர் மற்றும் முத்தி பெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென முத்தி பெற்றவர்கள், இறையடியார்கள் மறைசாட்சிகள் என 12 பேரின் பெயர்களைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ.

புனிதர் நிலைக்கானத் திருப்பீடப் பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ இன்று திருத்தந்தையைச் சந்தித்த போது இந்த 12 பேரின் பரிந்துரைகளால் இடம் பெற்ற புதுமைகள் மற்றும் அவர்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களைச் சமர்ப்பித்தார்.

1845ல் ஸ்பெயினில் பிறந்த இயேசுவின் பிள்ளைகள் சபையை நிறுவிய முத்தி பெற்ற கான்டிடா மரிய தி ஜேசு சிப்பித்திரியா இ பரியோலா,

இங்கிலாந்தில் பிலிப்புநேரி நாவலர்கள் என்ற சபையை நிறுவிய கர்தினால் ஜான் ஹென்றி நியுமென்,

இத்தாலியின் கார்மேல் சபையின் குரு ஆஞ்சலோ பவுலோ,

1843ல் எருசலேமில் பிறந்த எருசலேம் செபமாலையின் தொமினிக்கன் சபையைத் தொடங்கியவர்க்கு உதவிய அல்போன்சினா டானியேல் காட்டாஸ் ஆகியோரின் பரிந்துரைகளால் புதுமைகள் இடம் பெற்றுள்ளன.

மறைசாட்சிகளான ஸ்பெயினின் குரு ஜிசப்பே சாம்சோ எலியாஸ், குரு தெயோபிலோ பெர்ணான்டஸ் தெ லெகாரியா கோனி மற்றும் அவரது நான்கு தோழர்களின் பெயர்களும் திருத்தந்தையிடம் பரிந்துரைக்கப்பட்டன. இவர்கள் 1936ல் ஸ்பெயினில் இடம் பெற்ற சமய அடக்குமுறையின் போது கொல்லப்பட்டவர்கள்.

ஜெர்மனியின் மறைமாவட்ட குரு ஜார்ஜோ ஹாப்னர் 1942ல் டக்காவோ நாத்சி வதைப்போர் முகாமில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்.

ஹங்கேரி நாட்டு எஸ்டர்காம் துணை ஆயர் சோல்ட்டன் லூடோவிக்கோ மெஸெல்னியி 1951ல் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்.

மேலும், இறையடியார் குரு மேரியன்கில் மறைபோதகக்குரு என்கெல்மார் உன்செய்டிக், தெற்கு மொராவியாவில் 1911ல் பிறந்தவர். இவர் 1945ல் ஜெர்மனியின் டக்காவோ வதைப்போர் முகாமில் இறந்தவர்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இறையடியார் அன்ன மரியா யானர் ஆங்லாரில் ஊர்ஜெல் திருக்குடும்ப சகோதரிகள் சபையை நிறுவியவர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த இறையடியார் இயேசுவின் திருஇதய மரிய செராப்பினா, தூதர்களின் சகோதரிகள் சபையை நிறுவியவர்.

இளம் பெண்ணான இறையடியார் தெரேசா மான்கனியெல்லோ 1849ல் இத்தாலியில் பிறந்தவர். புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்த இவர் 1876ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறந்தார். இந்த நான்கு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்க்கை பற்றிய விபரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ.








All the contents on this site are copyrighted ©.