2009-07-01 14:40:58

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்


ஜூலை01,2009 கடந்த ஞாயிறன்று நிறைவு பெற்ற புனித பவுல் ஆண்டுக்கும் தற்போது இடம் பெற்று வரும் குருக்கள் ஆண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கிறிஸ்துவின் மறையுண்மை தனியார் என்ற வகையிலும் சமூகமாகவும் நம் வாழ்வின் இதயமாக இருக்க வேண்டும் என்பதை புனித பவுல் தன் வாழ்வு மூலமும் எழுத்துக்கள் மூலமும் நமக்குக் கற்றுத் தருகிறார். இது சிறப்பான விதத்தில் குருக்களுக்குப் பொருத்தமுடையதாக உள்ளது. பங்குக் குருக்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் வாழ்விலும் இது உண்மையாகக் காணக்கிடக்கிறது. அதாவது குருக்களின் மனிதம் என்பது அவர்களின் பணியோடு அடையாளம் காணப்படுகிறது. குருக்களின் மனிதத் தனித்துவம் என்பது அவர்களின் அழைப்பிலும் கிறிஸ்துவுடனான திருவருட்சாதன ஒன்றிப்பிலும் ஆழமாக வேரூன்றப்பட்டு குருவின் மறைப்பணி நடவடிக்கையிலிருந்து வேறுபடுத்திக் காணமுடியாததாகின்றது. குருவி்ன் பணி என்பது பக்தி முறைகளோடு கூடியது, அது ஒவ்வொரு விசுவாசியையும் அவர்களின் வாழ்வை கடவுளுக்கு உகந்த பலியாக அர்ப்பணிப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டியது. ஒவ்வொரு குருவும் தன் அழைப்பு அர்ப்பணம் பணி எனும் உன்னத கொடையை உணர்ந்து பாராட்டும் மகிழும் வாய்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் வழங்கும் காலமாக இக் குருக்கள் ஆண்டு இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாண்டில் அகில உலகத் திருச்சபையும் குருக்களின் புனிதத்துவத்திற்காக, இறையழைத்தல்களுக்காகச் செபித்து திருச்சபையின் திருச்சபையின் வாழ்வில் அவர்களின் பங்கை மேலும் ஏற்று மதித்து பாராட்டும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இதன் பின்னர் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.