2009-06-27 15:41:03

இலங்கைப் போரின் போது 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான மீனவர்களைக் குடும்பத்தினர் தேடுகின்றனர்


சூன்27,2009. இலங்கையில் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது 1998 மற்றும் 99ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இருக்குமிடம் இன்னும் தெரியவில்லை என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமற்போயுள்ள வேளை, அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு அகதிகள் முகாம்களுக்குள் தங்களை அனுமதிக்குமாறு அவரிகளின் குடும்பத்தினர் அதிபர் மகிந்த இராஜபக்வுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர் என்றும் அச் செய்தி நிறுவனம் அறிவித்தது.

இந்த மீனவர்கள் இருக்குமிடம் குறித்து அறிவதற்கு கருணா அம்மணை அரசு விசாரிக்குமாறும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது ஆசிய செய்தி நிறுவனம்.

காணாமற்போயுள்ள மீனவ ஆண்களின் பெற்றோர், மனைவிகள் குழந்தைகள் என்ற ஓர் அமைப்பையும் அவர்கள் உருவாக்கி ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்







All the contents on this site are copyrighted ©.