2009-06-23 15:32:43

விவிலியத் தேடல் நிகழ்ச்சி . காணாமற்போன மகனின் உவமை .

லூக்கா 15, 25 – 32 .


இந்த உவமையில் இரண்டு ஊதாரி மைந்தர்கள் இருக்கிறார்கள் . இளையவன் தம் உடல் சுகத்துக்காக தொலைதூரம் சென்று காணாமற் போயிருநது வீடு திரும்பினான் . அவனுக்கு மூத்தவன் வீட்டிலேயே தந்தையோடு இருந்தும் அவரோடு உடன்பாடு இல்லாது மனத்தளவில் தொலைதூரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் . மூத்தவன் நல்லமுறையில் திட்டமிட்டு தான் வீட்டிலேயே இருந்து தந்தைக்கு உதவுவதற்காக தங்கியிருந்தான். ஆனால் அவன் வாழ்வில் அவனே மையமாக இருந்து கொண்டிருந்தான் . மற்றவர்களைப் பற்றியும் மற்றவைகளைப்பற்றியும் அவனுக்கு அக்கறையில்லை . இவ்வாறு அவன் வாழ்வில் இருள் கவ்வியது . இந்த இருள் முற்றிலுமாக அவனை ஆட்கொண்டுவிட்டது . தான் , எனது என்ற அகந்தையோடு வாழ்ந்துவந்தான் . அந்த வீண்பெருமை உடல்சுகத்துக்காக தன்னை இழப்பதைவிடக் கொடுமையானது . அது வெளியில் , உடலில் இருக்கும் ஒரு புண்ணைவிட இரத்தத்தில் புற்று நோய் தாக்குவது போன்றது . குணப்படுத்துவது கடினம் . ஒருவேளை மூத்தவன்தான் இளையவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குக்காரணமாக இருந்திருக்கலாம்் . மூத்தவன் தன்னையே பெருமையாக நினைத்துக்கொண்டு இளையவனை மட்டந்தட்டி எதற்கும் அருகதையற்றவனாகப் பார்த்திருக்கலாம் . ஒருவேளை இந்த மூத்தவன் ஹிட்லரும் மற்ற மேலை நாட்டவரும் யூத குலத்தவரையும் பிறநாட்டவரையும் தம் நாட்டிலிருந்து விரட்டியதுபோல தன் தம்பியையே பயனில்லாதவன் என்ற முறையில் சொல்லாலும் செயலாலும் வாட்டியிருக்கலாம் . அவனும் ஒரு ஊதாரியே .

பஞ்சத்தைவிட மிக மோசமான தண்டனை அவனுக்கும் வந்தது . அவனை இந்த உலகம் மதிக்கவில்லை என்ற பைத்தியத்தில் மாட்டிக்கொண்டான் . ஊர்சுற்றிவிட்டு திரும்பும் தன் தம்பியை அவர்களது தந்தை வரவேற்றதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அதுவும் அமர்க்களமான பாராட்டுக்களைப் பெறுவதையும் விழாக்கொண்டாடுவதையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை . பாரும் , இந்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன் . உம் கட்டளைகளை நான் ஒருபோதும் மீறியதில்லை என்றார் . ஆனால் மனத்தளவில் அவர் மீறியிருந்தார் .

என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக் கூட என்றுமே நீர் தந்ததில்லை . ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே இவனுக்காகக் கொழுத்த கன்றை நீர் அடித்திருக்கின்றீரே என்றார். தன் மனதுக்குள் தன் தம்பியைப்போல தானும் அனுபவிக்கமுடியவில்லையே என வருந்தியிருந்தார் . தம் தம்பி அவர்களது தந்தையைப் பார்த்ததற்கு முன்னர் தம்மைப் பார்த்திருந்தால் தன் தம்பியை நீ கொடுத்துவைத்தவன் எனக்கூறிப் பாராட்டியிருப்பார் .



இந்த காணாமற்போன மகனின் உவமை இரண்டு ஊதாரி மகன்களின் கதை . அதுமட்டுமல்ல . கடவுளுக்கு மூன்று ஊதாரி மகன்கள் இருந்தார்கள் . அந்த மூன்றாவது ஊதாரி மகன் யாரென்று உங்களுக்குத் தெரியுமா .







All the contents on this site are copyrighted ©.