2009-06-23 15:32:59

வட கொரியாவிற்கான சர்வதேச காரித்தாஸ் நிறுவனத்தின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்


சூன்23,2009 வட கொரியாவின் அணுப்பரிசோதனைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் அந்நாட்டிற்கான சர்வதேச காரித்தாஸ் நிறுவனத்தின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதன் உறுப்பினர்கள் அறிவித்தனர்.

இத்திங்களன்று நிருபர்களிடம் பேசிய அருட்திரு மைக்கிள் லி ஜாங்-ஜூன், வட கொரியாவின் அண்மை அணுப்பரிசோதனை நடவடிக்கைகளை முன்னிட்டு அந்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் பசிக்கொடுமையையும் பலர் மறக்கக் கூடும் என்று கூறினார்.எனினும், சர்வதேச சமுதாயத்திற்கு வட கொரிய மக்களின் உண்மை நிலையை நினைவுபடுத்த சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் விரும்புகின்றது என்று அக்குரு கூறினார்.

வடகொரியாவில் பெரும்பான்மையினோர் குறிப்பாக சிறாரும் கர்ப்பிணி பெண்களும் முதியவரும் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் நலவாழ்வு தொடர்பு பிரச்சனைகளால் துன்புறுகின்றனர் என்றும் சர்வதேச காரித்தாஸ் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.