2009-06-23 15:32:46

உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்டுகின்றனர், சர்வதேச காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர்


சூன்23,2009. தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு போதுமான வளங்கள் இல்லாத ஏழைகள், உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்டுகின்றனர் என்று கூறினார் சர்வதேச காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர் லெஸ்லெ ஆன் நைட்.

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலரின் தலைமையில் ஜெனீவாவில் இச்செவ்வாயன்று இரண்டு நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ள உலகளாவிய மனிதாபிமான அமைப்பினரிடம் இவ்வாறு தெரிவித்த அவர், வெப்பநிலை மாற்றம் ஏழைகளை அதிகம் பாதிப்பதால் காரித்தாஸ் போன்ற மனிதாபிமான நிறுவனங்கள் ஏழைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்றார்.

புயலால் அடிக்கடி பாதிக்கப்டும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் காரித்தாஸ் அமைக்கும் குடியிருப்புகள் பேரிடர்களின் போது நல்ல பாதுகாப்பைத் தருவதையும் ஆன் நைட் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.