2009-06-23 15:33:52

உலக பொருளாதார நெருக்கடி மனித வியாபாரத்திற்கெதிரான செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, புதிய அறிக்கை


சூன்23,2009 உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த ஆண்டில் மனித வியாபாரத்திற்கெதிரான செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மனித வியாபாரிகளிடம் அதிகப்பேர் சிக்க காரணமாக இருந்தது என்றரைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிக்கை, நவீன கால அடிமைத்தனம் என்ற வடிவில் ஏதாவது ஒரு முறையில் ஏறத்தாழ ஒரு கோடியே 23 இலட்சம் பேர் இந்த மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியது.

175 க்கும் மேற்பட்ட நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், மனித வியாபாரத்திற்கெதிரான முயற்சிகளில் காணப்பட்ட சில நல்ல முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டது.

2008ம் ஆண்டில் மனித வியாபாரத்திற்கெதிரான 26 விதிமுறைகள் உலக அளவில் நடைமுறைபடுத்தப்பட்டன என்றும் அவ்வறிக்கை கூறியது.








All the contents on this site are copyrighted ©.