2009-06-20 15:01:15

சண்டைகள் இடம் பெறும் இடங்களில் பெண்களும் சிறுமிகளும் எதிர்நோக்கும் அநீதிகள் களையப்பட சர்வதேச காரித்தாஸ் அழைப்பு


சூன்20,2009. உலகில் சண்டைகள் இடம் பெறும் இடங்களில் பெண்களும் சிறுமிகளும் எதிர்நோக்கும் அநீதிகள் களையப்பட அரசுகளும் சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது சர்வதேச காரித்தாஸ் அமைப்பு.

இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட உலக அகதிகள் தினத்திற்கென செய்தி வெளியிட்ட சர்வதேச காரித்தாஸ் அமைப்பு, மோதல்கள் இடம் பெறும் இடங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண் அகதிகளிந் நெருக்கடி நிலை குறித்து விவரித்துள்ளது.

ஆயுதம் தாங்கிய மோதல்களில், வன்முறை மற்றும் உரிமை மீறல் மூலமாகப் பெண்களை அவமானப்படுத்துவது பொதுவான செயலாக இடம் பெறுகின்றது என்று சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் குடியேற்றதாரர்க்கான ஒருங்கிணைப்பாளர் மார்ட்டீனா லிபெஷ் கூறினார்.

கொலம்பியாவில் வீடுகளைவிட்டு வெளியேறிய பெண்களில் 17.7 விழுக்காட்டினர் பாலியல் வன்முறையையே அதற்குக் காரணமாகச் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 463 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், இது அதற்கு முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம் என்றும் லிபெஷ் கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.