2009-06-20 15:00:20

இந்தியாவில் குருக்கள், இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறார்கள், கர்தினால் கிராசியாஸ்


சூன்20,2009. இந்தியாவில் குருக்கள், மனிதனுக்கு விடுதலை வழங்கும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறார்கள் என்று இந்தியாவின் இலத்தீன் ரீதி ஆயர் பேரவைத் தலைவரான மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறினார்.

மும்பை உயர்மறைமாவட்டத்தில் ஓய்வுபெற்ற குருக்கள் வாழும் இல்லத்தில் இவ்வெள்ளியன்று சர்வதேச குருக்கள் ஆண்டை தொடங்கி வைத்தது பற்றிப் பேசிய கர்தினால் கிராசியாஸ், பல ஆண்டுகளாகத் தங்களது குருத்துவப் பணியை விசுவாசமாகச் செய்த வயதான குருக்கள் மீது கொண்டிருக்கும் பாசம் மற்றும் அவர்களைப் பாராட்டும் நோக்கத்தில் அங்கு இச்சர்வதேச ஆண்டை ஆரம்பித்து வைத்ததாகக் கூறினார்.

இச்சர்வதேச ஆண்டு ஒரு கொடை என்றும் கூறிய அவர், இந்திய குருக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

சமூக வாழ்வு, கல்வி, நலவாழ்வு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் மக்கள் குருக்களிடம் வழிகாட்டுதல் கேட்டு வருகிறார்கள், அதேசமயம் குருக்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்குப் பணி செய்யும் பல பகுதிகளில் துன்பத்துக்கும் உள்ளாகிறார்கள் என்றும் தெரிவித்தார் கர்தினால் கிராசியாஸ்..








All the contents on this site are copyrighted ©.