2009-06-18 16:08:00

மால்ட்டா அரசுத்தலைவர் திருத்தந்தையைச் சந்தித்தார்


சூன்18,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று வத்திக்கானில் மால்ட்டா அரசுத்தலைவர் ஜார்ஜ் அபெலா தலைமையிலான குழுவைச் சந்தித்தார்.

திருத்தந்தையை சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மற்றும் நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தியையும் மால்ட்டா அரசுத்தலைவர் சந்தித்தார்.

இச்சந்திப்புகளில் திருப்பீடத்துக்கும் மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நட்புறவு மேலும் உறுதி செய்யப்பட்டது, இன்னும், மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளின் நிலவரம் உட்பட சர்வதேச விவகாரங்களும் இவற்றில் இடம் பெற்றன. உலகில் நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வில் மால்ட்டா குடியரசு நல்லதொரு பங்கை ஆற்ற முடியும் என்பதும் இச்சந்திப்புகளில் எடுத்துரைக்கப்பட்டன.

தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள மால்ட்டா, இத்தாலியின் சிசிலி தீவுக்குத் தெற்காகவும், டுனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. இது மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. இதன் அதிகாரப்பூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. உரோமன் கத்தோலிக்கம் அரசு மதமாகும்.








All the contents on this site are copyrighted ©.