2009-06-17 15:58:58

வடகொரியாவில் பதட்டநிலையைக் குறைக்க அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க சர்வதேச காரித்தாஸ் அழைப்பு


சூன்17,2009. வடகொரியாவில் நிலவும் பதட்டநிலையையும் அந்நாட்டிற்கெதிரான இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தலுக்கான நிலைப்பாட்டையும் குறைக்க அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் சர்வதேச காரித்தாஸ் நிறுவனம்.

வடகொரியப் பகுதியில் வளர்ந்து வரும் பதட்டநிலை குறித்து பெய்ஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தின் இறுதியில் இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்ட காரித்தாஸ், அப்பகுதியில் இராணுவத் தாக்குதல் இடம் பெற்றால் வடகொரிய ஏழைகளின் நிலைமை மேலும் மோசமடையும் என்று கவலை தெரிவித்தது.

ஆசியா, வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த காரித்தாஸ் பிரிதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அப்பகுதியில் அணுஆயுதங்கள் களையப்படவும் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவும் அழைப்புவிடுக்கப்பட்டது.

வடகொரியாவில் 87 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுவதாகவும் சர்வதேச காரித்தாஸ் பொதுச் செயலர் லெஸ்லே ஆன்நைட் கூறினார்.

வடகொரியாவின் அணுஆயுதப் பரிசோதனைகளை முன்னிட்டு ஐ.நா. அந்நாட்டிற்கெதிரானத் தடைகளை விதித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.