2009-06-15 15:06:54

முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு காணப்படும் பசிக்கொடுமை அகற்றப்படுவதற்கு திருத்தந்தை அழைப்பு


சூன்15,2009. உண்மையாகவே முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு காணப்படும் பசிக்கொடுமை அகற்றப்படுவதற்கான தீர்மானங்களை ஐ.நா.கூட்டம் எடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை.

தற்போதைய உலகளாவிய பொருளாதாரம், நிதி நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் பற்றி நியுயார்க்கில் இம்மாதம் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள ஐ.நா.கூட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகில் ஏழைகளின் எண்ணிக்கை வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டு உலகில் நிலவும் பசி முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றார்.

இந்த ஐ.நா.கூட்டத்தில் பங்கு கொள்வோரும் பொது வாழ்க்கைக்குப் பொறுப்பானவர்களும் இப்பூமிப்பந்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களும் ஞான உணர்வுடனும் மக்களுடனான ஒருமைப்பாட்டுணர்வுடனும் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை. RealAudioMP3

இதனால் அதிகாரமும் வளங்களும் சமமாகப் பங்கிடப்படவும், ஒவ்வொரு மனிதனின் மாண்புக்கு முக்கியத்துவமும் குறிப்பாக எண்ணிக்கையில் அதிகமாகி வரும் ஏழைகள் மீது கவனம் செலுத்தப்படவும் வழி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இயேசுவின் திருஇதயம் மற்றும் புனிதத்துவத்திற்கான குருத்துவ நாளான சூன் 19, வருகிற வெள்ளியன்று சர்வதேச குருக்கள் ஆண்டு தொடங்குவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, குருக்களுக்காக விசுவாசிகள் செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.