2009-06-13 15:09:03

நைஜர் டெல்ட்டா பகுதியில் போரிடும் தரப்புகள் ஆயுதங்களைக் கைவிட்டு அப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு உதவ ஆயர் அழைப்பு


சூன்13,2009 நைஜீரிய நாட்டு நைஜர் டெல்ட்டா பகுதியில் போரிடும் தரப்புகள் ஆயுதங்களைக் கைவிட்டு அப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு உதவுமாறு அந்நாட்டு ஆயர் கபிரியேல் துனியா அழைப்புவிடுத்துள்ளார்.

ஏறத்தாழ ஒரு மாதமாகக் காணாமற்போயுள்ள 12 படைவீரர்களின் சடலங்களைக் கொண்ட இரண்டு புதைகுழிகள் கம்டுபிடிக்கப்பட்டுள்ளதையொட்டி இவ்வழைப்பை முன்வைத்துள்ளார் ஆயர் துனியா.

நைஜர் டெல்ட்டா பகுதியில் எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும் அப்பகுதி வளர்ச்சியடையாமலே இருப்பது குறித்த கவலையையும் ஆயர் வெளியிட்டார்.

நைஜர் டெல்ட்டா பகுதியிலுள்ள புரட்சிப் படைகள் அண்மை மாதங்களில் அந்நாட்டு எண்ணெய் தொழிற்சாலையைத் தொடர்ந்து தாக்கி வருவதை முன்னிட்டு அவற்றிற்கெதிரான இராணுவ அடக்குமுறைக்கு கடந்த மாதத்தில் உத்தரவிட்டுள்ளார் நைஜீரிய அரசுத்தலைவர் உமாரு முசா யார்அது.








All the contents on this site are copyrighted ©.