2009-06-13 15:08:05

தொப்புள் கொடி இரத்தத்தைத் தானம் செய்ய பிரிட்டன் பேராயர் அழைப்பு


சூன்13,2009 தொப்புள் கொடி இரத்தத்திலுள்ள திசுக்கள், இரத்த புற்று நோய், இரத்த சோகை, மூளைநரம்பு முடிச்சு உட்பட பல்வேறு வகையான நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தவதால், பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் தொப்புள் கொடி இரத்தத்தைத் தானம் செய்யுமாறு கேட்டுள்ளார் பிரிட்டன் பேராயர் ஒருவர்.

இஞ்ஞாயிறன்று உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இதனைத் தானம் செய்ய மக்களை ஊக்கப்படுத்திய கார்டிப் பேராயர் பீட்டர் ஸ்மித், குழந்தை பிறப்பில் எடுக்கப்பட்ட தொப்புள் கொடி இரத்தம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

மிகவும் பயனுள்ள இந்த தானத்திற்கு தற்சமயம் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருக்கின்றது என்றுரைத்த பேராயர் ஸ்மித், கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படுமாறு கேட்டுள்ளார்.

இரத்ததானம் கொடுப்பவர்களுக்கு நன்றி சொல்லவும் இத்தானத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டவுமென ஆண்டுதோறும் சூன்14ம் தேதி உலக இரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.