2009-06-12 14:23:38

மனித வியாபாரத்திற்கெதிரான உலகளாவிய பெண் துறவிகளின் செயல்பாடுகள் குறித்த மாநாடு உரோமையில் இம்மாதம் 15 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.


சூன்12, 2009. மனித வியாபாரத்திற்கெதிரான உலகளாவிய பெண் துறவிகளின் செயல்பாடுகள் குறித்த மாநாடு உரோமையில் இம்மாதம் 15 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச பெண் துறவு சபைகள் அதிபர்கள் அவையும் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பும் சேர்ந்து நடத்தும் இம்மாநாடு மனித வியாபாரத்தால் துன்புறும் மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வை தெரிவிக்கும் என இது குறித்த நிருபர் கூட்டத்தில் சொல்லப்பட்டது.

இன்னும், இந்நடவடிக்கைக்கு எதிராக பெண் துறவிகள் மேலும் உழைகக் வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா. கணக்கெடுப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.