2009-06-12 14:21:36

கேரளாவில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் வழிபாட்டுத் தலமும் தாக்கப்பட்டது குறித்து ஆயர்கள் வன்மையான கண்டனம்


சூன்12, 2009. இவ்வாரத்தில் கேரள மாநிலத்தில் இந்திய மார்க்சீய கம்யூனிச கட்சியால் நடத்தப்பட்ட பேரணியின் போது ஆலப்புழா மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் வழிபாட்டுத் தலமும் தாக்கப்பட்டது குறித்து அம்மாநில கத்தோலிக்க ஆயர்கள் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கேரள கத்தோலிக்க ஆயர்களின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் பேசிய அவ்வாயர் பேரவையின் பேச்சாளர் அருட்திரு ஸ்டீபன் அலத்தாரா, அரசியல் கட்சிகள் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயக விதிகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மே நாடாளுமன்றத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்தது, அவற்றில் திருச்சபை எடுத்த கடுமையான நிலைப்பாடு ஆகியவையே தற்சமயம் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் வழிபாட்டுத் தலமும் தாக்கப்பட்டுள்ளன என்றும் அக்குரு கூறினார்.

கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் பினராயி விஜயன் 370 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீதான விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை முன்னிட்டு இப்போராட்டம் நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.