2009-06-11 14:49:40

கேரளாவில் இறையடியார்கள் அருட்திரு ஆட்னி தச்சுபரம்பில், அன்னை பேட்ரா


சூன்11,2009. கேரள மாநிலத்தில் அருட்திரு ஆட்னி தச்சுபரம்பில், அன்னை பேட்ரா ஆகியோர் இறையடியார்கள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று தலத்திருச்சபை அறிவித்தது.

சேலக்காகாராவின் மறைபோதகர் என்றழைக்கப்படும் அருட்திரு ஆட்னி தச்சுபரம்பில் 1894ம் ஆண்டு சாலக்குடியில் பிறந்தவர். இவர், சேலக்காகாராவின் மிகவும் பின்தங்கிய காட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இனம், நிறம் மதம் எனப் பாராது ஏறத்தாழ 30 ஆண்டுகள் சேவையாற்றியவர். அனாதைச் சிறாருக்காக பாலபவன் மற்றும் பள்லியைத் தொடங்கிய அருட்திரு தச்சுபரம்பில், 1963ம் ஆண்டு சூன் 9ம் தேதி இறந்தார்.

மேலும், 1924ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த காத்ரீன் என்ற பெயர் கொண்ட அன்னை பேட்ரா,. ஊர்சுலின் சபையில் 1957ல் சேர்ந்தார். இந்தியாவில் தொழுநோயாளர் மற்றும் ஏழைகளின் துன்பங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அவர்கள் மத்தியில் வேலை செய்வதற்கென புதிய சபையைத் தொடங்க விரும்பினார். ஏழைகள், நோயாளிகள் குறிப்பாக தொழுநோயாளருக்காகப் பணி செய்வதற்கென கேரளாவின் பட்டுவம் என்ற கிராமத்தில் 1968ம் ஆண்டு தேன சேவ சபா என்ற நோயாளிகளுக்குப் பணியாற்றும் சபையை தொடங்கினார். 1976ம் ஆண்டு வாகன விபத்தில் இறந்தார் அன்னை பேட்ரா.

இறையடியார் என்ற நிலையானது முத்தி பெற்ற மற்றும் புனிதர் நிலைகளுக்கு முந்திய நிலையாகும்.








All the contents on this site are copyrighted ©.