2009-06-10 15:31:18

புதன் பொது மறைபோதகம் – புனித ஜான் ஸ்கோட்ஸ் எரிஜேனா


ஜூன்10,2009. சார்லேமாக்னே என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது ப்ரெஞ்ச் அரச மரபினரின் காலத்தில் நல்ல செல்வாக்குடன் வாழ்நத் கிறிஸ்தவ சிந்தனையாளரான புனித ஜான் ஸ்கோட்ஸ் எரிஜேனா குறித்து இன்றைய நம் மறைபோதகத்தில் நோக்குவோம் என தனது புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3

கீழைரீதியின் துவக்ககால இறையியலில் குறிப்பாக தியோனிசியுசின் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட எரிஜேனா, அவைகளை இலத்தீனில் மொழி பெயர்த்தார். எரிஜேனாவை பொறுத்தவரையில் நாம் எந்த இறைத்தன்மையில் பங்குபெறுவோமோ அந்த இறைவனை அமைதியில் ஆராதிக்கும்வரை உண்மையை நோக்கிய நம் தேட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த அனுபவம் என்பது வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்தப்பட முடியாத ஒன்று என்பதால் அவரின் இறையியலானது இறைவனில் காணப்படாதவைகளில் இருந்து தன் விளக்கத்தைத் துவக்குகிறது. அதேவேளை அவர் கூற்றுப்படி, இறைவனுக்கான மனிதத் தேட்டத்தில் பகுத்தறிவு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். காலத்தின் துவக்க காலத்திலிருந்தே மனித இதயத்தில் பதிக்கப்பட்டாலும் ஜென்மப்பாவத்தினால் மறக்கடிக்கப்பட்ட அவ்வுண்மையை மீண்டும் நம்மில் கொணர விவிலியம் உதவுகிறது. விவிலியத்தை வாசிப்பதன்வழி நாம் புனிதமான, உண்மையான இறைச் சிந்தனைகளின் இரகசியங்களின் மூடிகளை அகற்றலாம். ஆகவே நம் தினசரி செபம் மற்றும் தியானத்தில் இறைவார்த்தைகளின் பெருஞ்செல்வத்தை தோண்டி கண்டு கொள்ளும் பொருட்டு இடைவிடாத மனமாற்றத்தின் பாதையை தேர்ந்து கொள்வோம் என புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை. RealAudioMP3

பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தா RealAudioMP3 ர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.