2009-06-10 15:33:21

இறைவன் பற்றிய உணர்வானது முன்பிருந்ததைவிட தற்சமயம் அதிகம் வலியுறுத்தப்படுகின்றது, கர்தினால் தவ்ரான்


ஜூன்10,2009. பல கலாச்சார மற்றும் பல மதங்களைக் கொண்ட சமூகங்களில் மதங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துபவைகளாக இருக்கின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிரான்சில் நடைபெற்ற மதம் பற்றிய சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான், பயங்கரவாதத்தை நடத்துவோர் அதற்கு மதத்தை காரணமாகச் சாக்குப்போக்குச் சொல்வது குறித்து பேசிய போது இவ்வாறு கூறினார்.

பயங்கரவாதத்திற்கு மதத்தை இவ்வாறு பயன்படுத்துவது, மதம் ஆபத்தானது என்ற கண்ணோட்டத்தையும் தருகின்றது என்றும் அவர் எச்சரித்தார்.

சில சூழல்களில் மதம் எதிர்மறையான பெயரைப் பெற்றாலும், இறைவன் பற்றிய உணர்வானது முன்பிருந்ததைவிட தற்சமயம் அதிகம் வலியுறுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்தார் கர்தினால் தவ்ரான்.








All the contents on this site are copyrighted ©.