2009-06-09 14:08:40

பூனேயின் புதிய ஆயர் தாமஸ் தாப்ரே- ஏழைகளுக்கான மறைபோதகத் திருச்சபையைக் கட்டி எழுப்புதல்


ஜூன்09,2009. மதங்களிடையேயும் கலாச்சாரங்களிடையேயும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல், பிறரன்பு அமைப்புகளுக்கும் ஏழைகளுக்கும் உதவுதல், குருக்களும் பொதுநிலையினரும் விசுவாசத்தின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள உதவுதல் போன்றவைகளின் மூலம் தன் மறைப்பணியை கட்டி எழுப்ப விரும்புவதாக பூனேயின் புதிய ஆயர் தாமஸ் தாப்ரே அறிவித்தார்.

இன்றைய திருச்சபை கல்வி நிறுவனங்கள் நவீனகாலச் சூழல்களுக்குப் பதிலுரைக்க இயைந்த வகையில் நம்மைத் தயாரிப்பதாக இருக்க வேண்டும் என்ற ஆயர், இன்றைய சமூகத்தில் உலகமயமாக்கலின் சவால்கள் மற்றும் தேவைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மத பதட்டநிலைகளும் ஒருகாரணம் என்ற ஆயர் தாப்ரே, தவறான தகவல்கள் தவறாகப் புரிந்து கொள்ளல் போன்றவையே சமயசகிப்பற்றதன்மைகள், வன்முறை மற்றும் மதத்தீவிரவாதப் போக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன என தெரிவித்தார்.

கிறிஸ்தவர்க்கெதிரானப் போக்குகள் இன்றைய இந்தியாவில் பரவிவரும் நிலையில் மதங்களுக்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளும் பண்பாட்டுமயமாக்கலும் இன்றியமையாதவையாகின்றன என ஆயர் தாப்ரே மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.