2009-06-06 15:25:03

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கோடை விடுமுறை ஜூலை 13-29


ஜூன்06,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தமது ஆண்டு கோடை விடுமுறைக்கென வடமேற்கு இத்தாலியின் ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள Les Combes என்ற கிராமத்திற்குச் செல்வார் என்று பாப்பிறை இல்ல நிர்வாக அமைப்பின் தலைவர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

திருத்தந்தை வருகிற ஜூலை 13 முதல் 29 வரை இப்பகுதியில் இருக்கும் போது வழக்கமான அவரின் புதன் பொது மறைபோதகங்கள் இடம் பெறாது, ஆனால் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைகள் அவ்விடங்களில் இடம் பெறும் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த அவுஸ்தா மலைப்பகுதியில் கோடை விடுமுறையை முடித்து பின்னர் உரோமைக்குத் தெற்கே பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகை அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்போவுக்குச் செல்வார் திருத்தந்தை. செப்டம்பர் இறுதி வரை அங்கிருப்பார் திருத்தந்தை. அவரின் வழக்கமான புதன் பொது மறைபோதகங்கள் ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.