2009-06-05 17:18:53

ஒபாமாவின் அமைதிப்பேச்சுக்குக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆதரவு .0506.


இஸ்ராயேல் பாலஸ்தீனப் பிரச்சனை பல காலமாக நடந்துவருகிறது . அதனையொட்டியும் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் நலமடையவும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மத்திய கிழக்கு நாடுகளின் உறவை வலுப்படுத்த எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உரை வழங்கினார் . அதையொட்டி 60 க்கும் மேற்பட்ட அமெரிக்கக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து அனுப்பிய மடலில் விவிலியத்தை மேற்கோள் காட்டி அமைதியைத் தேடுவதும் அதைத் தொடர்வதும் தவிர மானிடருக்கு வேறு முக்கியப் பணி இல்லை எனத் தெரிவித்துள்ளனர் . பாலஸ்தீன இஸராயேல் மற்றும் இஸ்லாமிய அமெரிக்க நல்லுறவுகள் வலுப்பெற ஒபாமா எடுத்துள்ள முயற்சிகளைப்பாராட்டி , இது அவரது அதிபர் பணியில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆல்பனியின் ஆயர் ஹோவர்டு ஹப்பர்ட் .

அமெரிக்காவின் இஸ்லாமிய உறவுப்பேச்சுக்களை வத்திக்கான் திருப்பீட செய்தித்தாள் லொஸ்ஸர்வாத்தோரே ரொமானோ பாராட்டி செய்தி வெளியிட்டது . வத்திக்கான் திருப்பீடச்செய்தித் தொடர்பாளர் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி அமெரிக்க அதிபரின் உறவுப்பேச்சுக்கள் அகில உலகுக்குமே நன்மை பயக்கும் எனத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.