2009-06-04 17:55:23

கத்தோலிக்கக் குருக்கள் பெருந்தவறு செய்தால் பதவி நீக்க ஒழுங்குமுறைகள். 0406.


கத்தோலிக்கக் குருக்கள் வாக்குறுதிகளைப் பின்பற்றாதபோது அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான விதி முறைகளை ஒழுங்குபடுத்துகிறது வத்திக்கான் திருப்பீடம் .

குருக்கள் ஆணையகத் தலைவர் கர்தினால் கிலாடியோ ஹம்மஸ் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் ஆலோசனையோடும் அனுமதியோடும் புதிய சட்டங்களை வெளியி்ட்டுள்ளார் . குருக்கள் தங்கள் குருத்துவப் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேல் செய்யாதிருக்கும்போதும் , பதிவுத்திருமணம் செய்து வாழும்போதும் , திருமணமில்லாது குழந்தைப்பேற்றைப் பெறும்போதும் அவர்களுக்கு குருத்துவ வாழ்விலிருந்து நீங்கி பொது நிலை வாழ்வு வாழ புதிய விதிமுறைகளைத் தந்துள்ளது . பாலியல் ரீதியாக குழந்தைகளைப் பாதிக்கும் குருக்களை விசாரித்து நீதி வழங்க குருக்கள் ஆணையகம் வேறு சட்டங்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.