2009-06-04 18:10:15

ஒரிசாவில் கிறிஸ்தவ வீடுகளுக்குத் தீ . 040609 .


இந்தியாவின் ஒரிசாவில் கிறிஸ்தவ வீடுகளை இந்து மதத் தீவிர வாதிகள் தீயிட்டு எரித்துள்ளனர் .

மே மாதம் 31 ஆம் தேதி கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்ட படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டதும் வன்முறைகள் தொடங்கியுள்ளன .

வீடுகளுக்குத் தீ வைத்த நிகழ்ச்சி காந்தமால் மாவட்டத்தின் சிர்சாபாங்கா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது . இச்சம்பவம் அந்தப் பகுதிக்குக் கிறிஸ்தவர்களை வர விடாது தடுப்பதற்காக நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வீடுகளைத்தாக்கிய வன்முறைக்கும்பல் காவலர் அப்பகுதியிலிருந்து நீக்கப் படுவதைக் கொண்டாடுவதற்காக வீடுகளுக்குத் தீயிட்டு நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது . காவல் படையின் 1000 பேரை அங்கு நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை ஒரிசாவின் ஆளுநர் நவீன் பட்நாயக் கேட்டுள்ளார் . காவலர்கள் நீக்கப்படும் சமயம் அரசினர் அகதிகள் முகாம்களும் மூடப்படுகின்றன . குற்றம் புரிவோர் அப்பகுதியில் சுற்றித்திரிவதாகவும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் பங்குக்குரு பிஜய் பிரதான் தெரிவிக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.