2009-06-04 17:59:36

ஐ .நாவின் குழந்தைகள் மாண்பைக் காக்கும் புகைப்படக்கண்காட்சி.0406 .


ஐ . நாடுகள் சபையின் குழந்தைகள் மாண்பைக்காக்கும் புகைப்படக் கண்காட்சியின் திறப்பு விழாவில் உரை வழங்கினார் பேராயர் சில்வானோ தோமாசி . ஜெனீவாவில் இயங்கும் ஐநாவுக்கான மன்றத்தின் வத்திக்கான் திருப்பீடத்தின் நிரந்தர உறுப்பினர் பேராயர் தோமாசி . ஐநாவின் ஜெனீவா சபையில் குழந்தைகளின் நம்பிக்கையும் மாண்பும் பற்றிய புகைப்படக்கண்காட்சி ஜூன் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது .



அங்கு உரை வழங்கிய பேராயர் சில்வானோ தோமாசி குழந்தைகளே வருங்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் . மனித மாண்புக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் எனப் பேராயர் தெரிவித்தார் . கிறிஸ்தவ கல்விக்கூடங்கள் வழியாகவும் , தொண்டு நிறுவனங்கள் வழியாகவும் உலகெங்கும் பல கோடிக்குழந்தைகள் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள் . உணவுப்பற்றாக்குறை , மருத்துவ வசதிகள் , மருந்துகள் இல்லாமை , வறுமையின் கோரத்தன்மை , வன்முறை , முகாம்களில் படுகின்ற துயரங்கள் மற்றும் கட்டாயமாக போர்ப்படையில் சேர்க்கப்படுதல் போன்ற தீமைகள் குழந்தைகளைப்பாதிப்பதாகத் தெரிவித்தார் பேராயர் . 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் 90 லட்சம் பேர் 2007 ஆம் ஆண்டு இறந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . ஆப்பிரிக்காவில் 8 லட்சம் குழந்தைகள் எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . குழந்தைகளுக்கு புதிய ஆயிரமாவது ஆண்டின் திட்டங்கள் பலன் தரவேண்டும் எனக் கத்தோலிக்கத் திருச்சபை விரும்புவதாகத் தெளிவுபடுத்தினார் பேராயர் சில்வானோ தோமாசி .








All the contents on this site are copyrighted ©.