2009-06-04 18:06:43

இந்தியப் பாராளுமன்றத்தில் சபாநாயகராக தலித் இனப் பெண் . 040609 .


இந்தியப் பாராளுமன்றத்தின் சபாநாயகராக தலித் இனப் பெண் தேர்வு செய்யப்பட்டதற்கு கிறிஸ்தவ மகளிர் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது .

மெய்ரா குமார் எவ்வித எதிர்ப்பும் இல்லாது இம்மாதம் 3 ஆம் தேதி மக்கள் சபையின் கீழ் பாராளுமன்றத்தின் சபாநாயகராத் தேர்வு செய்யப்பட்டார் . இந்தியாவின் 62 ஆண்டு வரலாற்றில் மகளிர் ஒருவர் , மற்றும் 2 ஆவது தலித் இனத்தவர் பாராளுமன்ற சபாநாயகரத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இந்திய ஆயர்கள் குழுவின் மகளிர் பிரிவுத் தலைவி அருள் சகோதரி லில்லி பிரான்சிஸ் பெரிதும் பாராட்டியுள்ளார் . தலித் என்ற இந்தி மொழி்க்கு உடைத்துத் திறக்கப்பட்டது என்பது பொருளாகும் . மெய்ராகுமார் காலணித் தொழில் செய்வோர் இனத்தைச் சேர்ந்தவராவார் . 543 உறுப்பினரைக் கொண்ட மக்கள் சபையில் 59 மகளிர் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . குடியரசுத்தலைவர் பிரதிபா பட்டேலும் , உபிஏ கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும் மகளிருக்கு பெருமை சேர்க்கின்றனர் .








All the contents on this site are copyrighted ©.