2009-06-03 13:13:23

தெற்காசியாவில் பசி பட்டினி அதிகரிப்பு


ஜூன்03,2009. தெற்காசியாவில் கடந்த 40 ஆண்டுகளில் தற்சமயம் பசிப் பிரச்சினை அதிகமாக இருப்பதாக ஐ.நா அறிக்கை ஒன்று கூறியது.

இப்பகுதியில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் 10 கோடி பேருக்கு மேற்பட்டோர் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்கினர், அவ்வெண்ணிக்கை தற்சமயம் 40 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யூனிசெப் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. .

உணவு மற்றும் எரிபொருட்கள் விலை மிகவும் அதிகமாக இருப்பதாலும், உலக நிதித்துறை நெருக்கடியாலும், வேலைவாய்ப்புக் குறைவதாலும் வெளிநாடுகளில் வாழும் குடும்பங்கள் அனுப்பும் பணம் குறைந்து வருவதாலும் தெற்காசியாவில் பசி பட்டினிப் மிகவும் அதிகரித்திருப்பதாக அவ்வறிக்கை கூறியது

நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாககவும் யூனிசெப் கூறியது.

பல சமயங்களில் ஏழை பெண்கள், கிடைக்கும் உணவை, குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டு, உணவின்றி இருக்க நேரிடுவதாகவும், குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்வது நிறுத்தப்பட்டு, அவர்களும் வேலைக்குப் போக நேரிடுவதாகவும் அவ்வறிக்கை கூறியது.








All the contents on this site are copyrighted ©.