2009-06-03 13:10:23

ஒரிசாவிலிருந்து மத்திய அரசு தனது படைகளை அகற்றத் திட்டமிட்டிருப்பது குறித்து தலத்திருச்சபை கவலை


ஜூன்03,2009. இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலிருந்து மத்திய அரசு தனது படைகளை அகற்றத் திட்டமிட்டு வருவது குறித்து தலத்திருச்சபை கவலை அடைந்துள்ளதாக கட்டாக் புவனேஸ்வர் உயர்மறைமாவட்ட சமூகப்பணி மைய இயக்குனர் கூறினார்.

ஒரிசாவில் நிலைமை இன்னும் மிகவும் பதட்டத்துடன் காணப்படுவதால் மத்திய அரசு தனது படைகளை அகற்றுவது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் என்று அருட்திரு அஜய்சிங் கூறினார்.

மீண்டும் தாக்குதல்கள் இடம் பெறும் என்ற அச்சத்தில் நிவாரண முகாம்களில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்று கூறிய அக்குரு, மக்கள் வன்முறையையும் தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டதையும் இன்னும் மறக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பணியிலுள்ள தனது உபஇராணுவப் படைகள் இன்னும் ஒருமாதத்திற்குள் திரும்பப் பெறப்படும் என்று இத்திங்களன்று மத்திய அரசு அறிவித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.

இதற்கிடையே, இவ்வெள்ளியன்று இந்நிலைமை குறித்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்றை அரசு அதிகாரிகளுடன் நடத்த கிறிஸ்தவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று வேதியர் சக்கரியா திகால் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.