2009-05-30 15:21:13

ரஷ்யாவின் ரசாயன ஆயுதங்களைக் அழிக்க சைபீரியாவில் புதிய மையம்


மே30,2009. இரஷ்யா வைத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான வேதிய ஆயுதங்களை அழிப்பதற்கான தனியான தொழிற்சாலை ஒன்று சைபீரியாவில் திறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் வேதிய மற்றும் உயிரியல் ஆயுதங்களை அழிக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக ஏறத்தாழ 20 இலட்சம் வேதிய ஆயுதங்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான நிதியில் 100 கோடி டாலரை அமெரிக்க ஐக்கிய நாடு அளிக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

யூரல் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையில் ஐந்தாயிரத்தி ஐநூறு டன் வேதிய ஆயுதங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. இதில் மிகமோசமான நரம்பு வாயுக்கள், சரின் மற்றும் வி எக் ஸ் ஆகியவையும் அடங்கும்.

இந்த வாயுக்களின் நச்சுத்தன்மை அகற்றப்பட்டு, பின்னர் இவை நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் கான்கிரீட்டு கிடங்குகளில் அடைத்து வைக்கப்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.