2009-05-29 10:43:55

வரலாற்றில் மே 29


புனித ஊர்சுலா லெடொஷோவிஸ்கா விழா. ஆஸ்ட்ரியாவில் பிறந்த இவர், துன்புறும் இயேசுவின் திருஇதய ஊர்சுலின் சபையை நிறுவியவர். இவரது சகோதரி தெரேசா லெதோசோவிஸ்காவும் ஒரு புனிதையாவார்.

மேலும், மே29, 1869 - பிரிட்டனில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது

1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது

1953 - முதற்தடவையாக சர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் ஆகிய இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.

1982 – திருத்தந்தை 2ம் ஜான் பவுல் இங்கிலாந்தின் ஆங்கிலக்கன் சபை காண்டர்பரி பேராலயத்தைத் தரிசித்தார். இதன்மூலம் அப்பேராலயத்திற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயரையும் பெற்றார்.

நேபாள குடியரசு தினம்

நைஜீரியா - மக்களாட்சி நாள்

ஐ.நா.அமைதிப்படையின் சர்வதேச நாள்








All the contents on this site are copyrighted ©.