2009-05-28 17:36:23

புலம் பெயர்ந்தோரை மனிதாபிமானத்தோடு நடத்துக , ஐசிஎம்சி . 280509.


புலம் பெயர்வோரை மோசமாக நடத்துவதாக ஐரோப்பிய சமுதாயத்தைக் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனம் குறைகூறியுள்ளது . கடந்த வாரம் லிபியா நாட்டைச் சேர்ந்தவர்கள் 238 பேர் ஐரோப்பியக் காவல் படையால் மீட்கப்பட்டனர். அவர்களில் மகளிரும் குழந்தைகளும் அடங்குவர் . அவர்களுக்கு மனிதர்கள் என்ற முறையில் பிறரன்பைக்காட்டி தங்குவதற்குப் புகலிடம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களை லிபியா நாட்டுக்கே திருப்பியனுப்பியுள்ளதை புலம் பெயர்வோருக்கான ஐசிஎம்சி என்னும் கத்தோலிக்க தொண்டு நிறுவனம் கண்டித்துள்ளது . 1951 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிக்காது இத்தாலிய அரசும் ஐரோப்பிய அரசுக்களும் நடந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம் . புலம் பெயர்ந்து தஞ்சமடையும் மக்களை வரவேற்கத் தக்க வழிமுறைகளை அரசுக்கள் அமைத்திட வேண்டும் என ஐசிஎம்சியின் தலைவர் ஜோகான் கெட்டலர்ஸ் அறிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.