2009-05-25 14:34:35

சீனத் தலத்திருச்சபைக்கு திருத்தந்தை அனுப்பிய கடிதத்திற்கான விளக்கம் ஒன்றை கேளிவி-பதில் முறையில் தயாரித்து வெளியிட்டுள்ளது திருப்பீடம்


மே25,2009. 2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சீனத் தலத்திருச்சபைக்கு அனுப்பிய கடிதத்திற்கான விளக்கம் ஒன்றை கேளிவி-பதில் முறையில் தயாரித்து திருத்தந்தையின் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

திருத்தந்தையின் இரண்டாண்டிற்கு முன்னான கடிதத்திற்குச் சீனத் திருச்சபை அதிகாரிகள் மற்றும் விசுவாசிகளிடமிருந்து பெருமளவான ஆதரவும் ஆர்வமும் இருந்ததைத் தொடர்ந்து சீனத் திருச்சபையின் இன்றைய நிலைப்பாடுகள் அகில உலகத் திருச்சபையின் அது குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து விளக்கமளித்து புதிய ஏடு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீன அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்தவைகளில் திருத்தந்தையின் கண்ணோட்டம், சீன அரசுக்குத் திருத்தந்தையின் கடிதம் வழங்கும் பிற செய்திகள், சீனத் திருச்சபைக்கானத் திருத்தந்தையின் வழிகாட்டுதல்கள், சீன விசுவாசிகளுக்கும் மேய்ப்புப்பணியாளர்களுக்கும் இடையேயான உறவு முரண்பாடுகள் குறித்த திருத்தந்தையின் கருத்து, சீனாவில் ஆயர் நியமனங்கள் குறித்தத் திருத்தந்தையின் கண்ணோட்டம், தலத்திருச்சபைக்கான அவரின் அறிவுரைகள் போன்ற பல்வேறு நிலைகள் குறித்து கேள்வி பதில் பகுதியாக இஞ்ஞாயிறன்று மே24 வெளியிடப்பட்ட ஏடு விளக்கங்களை வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.