2009-05-23 13:38:49

பான் கி மூனின் இலங்கைப் பயணம்


மே23,2009. போரினால் புலம் பெயர்ந்துள்ள மக்கள் வாழும் முகாம்களை இச்சனிக்கிழமை பார்வையிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், பெருமளவான மனிதாபிமான உதவிகளுக்கும் அரசியல் ஒப்புரவுக்கும் வலியுறுத்தினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

கடும் போர் நடந்த இடத்தையும் அரசுத்தலைவர் மகிந்த இராஷபக்ஷேவையும் இவர் சந்திப்பது பயண திட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த மூன்று வருடங்களில் 6200 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் பலியானதாகவும், முப்பதினாயிரம் பேர்வரை காயமடைந்ததாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.










All the contents on this site are copyrighted ©.