இயேசுவின் விண்ணேற்பு விழா . நற்செய்தி வாசகம் மாற்கு 16 , 15 – 20 .
தூய மாற்கு வழங்கும் நற்செய்தி அதிகாரம் 16 , 15-20 .
15
இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16
நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத்
தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச்
செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத்
தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று
கூறினார்.19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து
கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப்
பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய
வார்த்தையை உறுதிப்படுத்தினார் .