2009-05-21 13:54:49

வரலாற்றில் மே 22


337ல் உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைனும்

1667 ல் திருத்தந்தை ஏழாம் அலெக்ஸாண்டரும் இறந்தனர்.

1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

1844 - பாரசீக மதகுரு பாப், பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பாஹாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறார்.

1848 – கரீபியன் கடலின் கிழக்குப் பகுதியிலுள்ள மார்ட்டினிக் தீவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

1906 - ரைட் சகோதரர்கள் பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்

1958- இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது.

1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து அது குடியரசானது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1990 – வடக்கு மற்றும் தெற்கு ஏமன் ஒன்றிணைந்து ஏமன் குடியரசானது.

மே22, சர்வதேச உயிரியப்பன்மைத்தன்மை தினம்








All the contents on this site are copyrighted ©.