2009-05-15 12:05:19

செயற்கைமுறை கருத்தடை திட்டத்துக்கு ஆயர் எதிர்ப்பு .150509.


செயற்கைமுறை கருத்தடைக்கு உதவும் அரசு சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் . செயற்கை முறையில் பயன்படுத்தப்படும் கருத்தடைச் சாதனங்களை ஊக்குவிக்கும் மற்றும் தொடக்கப்பள்ளிச் சிறார்களுக்கு பாலியல் கல்வியைக் கற்பிக்கும் அரசுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகளுக்கும் தேர்தலில் ஓட்டளிக்கக் கூடாது என இம்மாதம் 13 ஆம் தேதி சோர்ஸோகன் மறைமாவட்ட ஆயர் ஆர்த்தூரோ பாஸ்டஸ் அறைகூவல் விடுத்தார் . இப்படிப்பட்ட சட்டங்கள் குடும்ப வாழ்வைப் பாதிப்பதாக ஆயர் தெரிவித்துள்ளார் . கத்தோலிக்கத் திருச்சபை இயற்கை முறை கருத்தடைத் திட்டங்களையே அனுமதிக்கிறது . எட்டரைக்கோடி மக்கள் வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டில் 81 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கர்கள் . இவர்களில் 63 விழுக்காடு மக்கள் செயற்கைமுறை கருத்தடைத் திட்டத்துக்கு ஆதரவு தருவதாக ஆய்வு தெரிவிக்கிறது .








All the contents on this site are copyrighted ©.