2009-05-15 12:06:53

அமெரிக்காவில் இந்தியக் குருவானவர் தாக்கப்பட்டுள்ளார் . 150509 .


இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவர் அமெரி்க்காவின் டெக்சாஸ் மறைமாவட்டத்தில் தாக்கப்பட்டுள்ளார் . 42 வயதுடைய ஷாஜி வர்கீஸ் அங்குள்ள மாதா கோவில் பங்குத்தளத்தில் இந்த வியாழன் காலையில் கத்தோலிக்கர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . 2007 ஆம் ஆண்டிலிருந்து அங்கு பணி செய்து வருகிறார் . ஆபத்தான நிலையிலிருந்து , தற்போது உடல் நலம் தேறி வருவதாகத் தெரிகிறது . அவருக்காகவும் , அவரைத் தாக்கியவருக்காகவும் மறைமாவட்ட ஆயர் கடவுளை மன்றாடுமாறு கேட்டுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.