2009-05-13 14:01:20

அயர்லாந்து கர்தினால் ஆங்கிலிக்கன் கூட்டத்தில் முதன்முறையாகப் பங்கெடுப்பு


மே13,2009. அயர்லாந்தில் கத்தோலிக்கர் செல்வதற்கு ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ஆங்கிலிக்கன் ஆலயம் ஒன்றில் முதன்முறையாக அயர்லாந்து கத்தோலிக்க பிதாப்பிதா ஒருவர் உரையாற்றியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று அயர்லாந்து கர்தினால் ஜான் பிராடி, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை நடத்திய பொது அவையில் கலந்து கொண்டு, டப்ளின் ட்ரினிட்டி கல்லூரி ஆலயத்தில் உரையும் ஆற்றினார். அப்போது, நாம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான காலத்தில் வாழ்கிறோம் என்றார் அவர்.

அரசி முதலாம் எலிசபெத்தால் 1592ல் தொடங்கப்பட்ட அயர்லாந்தின் முதல் பல்கலைக்கழகமான ட்ரினிட்டி கல்லூரி, ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு பிரிட்டன் ஆட்சியின் கீழ் புரோட்டஸ்டாண்ட் சபையின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. 1793ம் ஆண்டுவரை இங்கு கத்தோலிக்கர் அனுமதிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் இறுதிவரை பல்கலைக்கழக படிப்புக்கான உதவியும் வழங்கப்படவில்லை. ஒரு கத்தோலிக்கர் இந்தக் கல்லூரி வாயிலில் நுழைவது பாவமென்ற நிலை 1940 முதல் 1972 வரை இருந்து வந்தது.








All the contents on this site are copyrighted ©.