2009-05-12 15:11:01

யாட் வாஷெம் யூதப்படுகொலை நினைவாலயத்தில் திருத்தந்தையின் உரை


மே12,2009. என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன். ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன். எசயா இறைவாக்கினர் நூலிலுள்ள இவ்வார்த்தைகள், நினைவு, பெயர் என்ற இரண்டு சொற்களை உள்ளடக்கியுள்ளன. அந்தக் கொடூர யூத இன அழிப்புச் செயலில் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக எழுப்பப்பட்ட இந்த இடத்தின் முன்பாக அமைதியாக நிற்கிறேன். இந்த மக்கள் வாழ்வை இழந்துள்ளார்கள், ஆனால் ஒருபோதும் பெயரை இழக்கவில்லை. ஒருவர் அயலாரது உடமைகளை, வாய்ப்புக்களை, சுதந்திரத்தை அபகரித்துக் கொள்ளலாம். சில குழுக்கள் மதிக்கப்பட தகுதியற்றவர்கள் என்று ஒருவர் மற்றவரை இணங்கச் செய்யலாம். ஆனால் யாரும் தனது அயலாரது பெயரை ஒருபோதும் எடுத்துவிட முடியாது. பலியான இவர்களின் பெயர்கள் ஒருபோதும் அழியாதிருக்கட்டும். இவர்களின் துன்பங்கள் மறுக்கப்படாதிருக்கட்டும். மறக்கப்படாதிருக்கட்டும். சிறுமைப்படுத்தப்படாதிருக்கட்டும். இவர்களின் அழுகுரல், அநீதி மற்றும் வன்முறைக்கு எதிரான ஒவ்வொரு செயலுக்கு எதிரான அழுகையாக இருக்கின்றது. இத்தகைய கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாதிருக்க நன்மனம் கொண்ட அனைவரும் விழிப்புடன் இருக்கட்டும். வெறுப்பு மனிதரின் இதயங்களை ஆட்சி செய்யாதிருப்பதற்கு திருச்சபை ஓய்வின்றி உழைக்கிறது செபிக்கின்றது மற்றும் அதற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கின்றது என்பதை உறுதி செயகிறேன். இந்த இடத்தில் அமைதியாக நிற்க வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி என்று சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை







All the contents on this site are copyrighted ©.