2009-05-12 15:13:00

முஸ்லீம் பிரதிநிதி குழுவுக்குத் திருத்தந்தையின் உரை


மே12,2009. எருசலேம் மசூதி வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பாறையின் மீதான கவிகைமாடத்தில், ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட மூன்று பெரிய மதங்களின் பாதைகள் சந்திக்கின்றன. பிளவுகளால் கிழிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் இப்புனித இடங்கள், கடந்த காலப் புரிந்துகொள்ளாமையையும் மோதல்களையும் நிறுத்தி உண்மையான உரையாடல் பாதையில் வருங்காலத் தலைமுறைகளுக்கு நீதியும் அமைதியும் நிறைந்த உலகைக் கட்டி எழுப்புவதற்கு உந்துதல் தருகின்றன. முஸ்லீம்களும் கிறிஸ்தவரும் ஏற்கனவே தொடங்கியுள்ள மதிப்புமிக்க உரையாடல், கடவுளின் ஒருமைத்தன்மை மனிதக் குடும்பத்தை எவ்வாறு பின்னி பிணைக்கின்றது என்பதற்கான வழிகளைக் காணும் என நம்புகிறேன். வல்லவராம் இறைவன் அனைவருக்கும் அமைதியை அருள்வாராக என்று சொல்லி உரையை முற்றுப் பெறச் செய்தார்.







All the contents on this site are copyrighted ©.